336
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
தேடிவைத்த செல்வம் தக்கார்கையிலே தானமாகப்
பொருந்தினால
அதன் பெருமை
வான் சிறிதாப்
போர்த்துவிடும் என்பதுபோல ஆசிரியர்
தொல்காப்பியனார்
அரும்பொருளை அடக்கிக் கூறிய இந்நூற்பா இவ்வாசிரியரிடம்
கிடைத்த அளவில் இதன் அருங்கருத்தாகிய பொருளால்
சொல் புலப்படும் ஞான பாகமான செய்தியை இவ்வாசிரியர்
குறிப்பிட்டுள்ளமை பாராட்டத்தக்கது. செய்யுட்கோவை
உரை யாது என்பது
புலனாகவில்லை. சொல்லையும் மனத்தையும்
கடந்தவன் இறைவன் என்றும்,
அவன் தத்துவப் பொருளை
முகபாவத்தால் விளக்கும் போது அதற்கேற்ப
அவன்
கரங்களில் ஒன்று மார்போடு சிந்முத்திரை கொண்டு
விளங்கும்
என்றும் முறையே மணிவாசகரும் நக்கீரரும்
அருளிஉள்ளனர். தெளிவு
பிறந்த பின்னரே மெய்ப்பொருள்
புலப்படும் என்பது.
இந்நூற்பாவிற்குப் (தொல். பொ. 491) பேராசிரியர்
எழுத்து
முடிந்தவாற்றானும் சொல் தொடர்ந்தவாற்றானும்
சொற்படு பொருளானும்
செல்வன் பொருள் அறியல் ஆகாமையின்
எழுத்தொடும் சொல்லொடும்
புணராது பொருட்குப்
புறத்தே பொருளுடைத்தாய் நிற்பது குறிப்பாவது
என்றவாறு......
‘குடத்தலையர்.............மூக்கினராம்.’
எனவரும்.
இதனுள் குடமே தலையாகப் பிறந்தார் எனவும், கொம்பெழுந்த
வாயினர் எனவும், கையுள் கொண்ட மூக்கினர் எனவும்
கூறியக்கால்
எழுத்தும் சொல்லும் பொருளும் இயல்பில
ஆதலும் குறிப்பினான் அதனைக்
குஞ்சரம் என்று கொண்டவாறும்
கண்டு கொள்க. இது பாட்டு
வடிவிற்றாகலின் பிசியன்று.
‘குறித்த பொருள் முடியக் காட்டாமையின் பாட்டு
அன்று’ என்று
கூறியுள்ளார். பேராசிரியர் காட்டிய
உதாரணம் பாட்டிடை வைத்த குறிப்பின்
பகுதியாய்
அடங்கும் என்று மறுத்து இவ்வாசிரியர் அரியதோர்
உரை
கூறியுள்ளமை, பல்புகழ் நிறுத்த படிவத்தாராகிய தொல்காப்பியனார்
உள்ளக்கிடக்கைக்கும், முன்
நூற்பாவில் கூறிய மந்திரத்துக்கும்
ஏற்றதாதல்
உணர்க.
|