பாட்டியல்
- நூற்பா எண் 150
|
339 |
இ - ள்: பார்ப்பு முதல் குழவி ஈறாக ஒன்பதும்
இருதிணையும்
இளமைத்தன்மை உணர்த்தும் பெயர்களாம்
என்றவாறு.
அவை உணர்த்துமாறு:
பார்ப்பும் பிள்ளையும் பறப்பனவற்றுள்ளும்
தவழ் சாதியுள்ளும்,
பறழ் குட்டி என்பன மூங்கா வெருகு எலி அணில்
என்பனவற்றுள்ளும்,
குருளை குட்டி பறழ் என்பன முயல் பன்றி நாய் நரியுள்ளும்,
பிள்ளை என்பது நாய் அல்லாத ஏனையவற்றுள்ளும்,
மறி குட்டி என்பன யாடு குதிரை நவ்வி புல்வாய்
கோடு வாழ்
விலங்கினுள்ளும்,
மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் அக்கோடு
வாழ்
விலங்கினுள்ளும்,
கன்று என்பது யானை, குதிரை, கழுதை, கடமை, மான்,
எருமை,
மரை, கவரி, ஒட்டகம், கராம் இவற்றுள்ளும்,
குழவி என்பது குஞ்சரம் எருமை கடமை மரை குரங்கு
முசு சிதல்
எறும்பி இவற்றுள்ளும், பின் நின்ற சிதல்
எறும்பி இவற்றின்
கிளைப்பிறப்பினுள்ளும்,
குழவி மக பிள்ளை என்பன மக்களுள்ளும்,
பிள்ளை, குழவி, கன்று, போத்து என்பன ஓரறிவுயிருள்ளும்
இளமைப்பெயர்க்கு உரியவாதல் ஓர்ந்து உணர்க.
|