பாட்டியல்
- நூற்பா எண் 154 |
347 |
மூவறிவு :
கிளை - ஈயல் மூதாய் போல்வன.
பிறப்பு - மக்கட் குழவியும் விலங்கின் குழவியும் மூவறிவின
வாகிய பருவம்.
நாலறிவு :
கிளை - வண்டு தேனீ குளவி முதலாயின.
பிறப்பு
- மக்கட்குழவியும் விலங்கின் குழவியும் நான்கறிவின
வாகிய பருவம்.
ஐயறிவு :
கிளை - எண்கால் வருடையும் குரங்கும் போல்வன.
பிறப்பு - கிளியும் பாம்பும் முதலாயின.
ஆறறிவு :
கிளை - தேவர் தானவர் முதலாயினார்.
பிறப்பு - குரங்கு முதலியவற்றில் சென்ற பிறப்பின் நல்வினை
யான் மன உணர்வுடையன.
‘விரிகாஞ்சித் தாதாடி இனக்குயில் விளிப்பவும்
பிரிவஞ்சா தவர்தீமை மறைப்பன்மன் மறைக்கினும்
கரி பொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின்வாடி
எரிபொத்தி என் நெஞ்சம் சுடுமாயின் எவன்செய்கோ.’
- கலி. 34
என்பதனால் மரம் ஓரறிவுயிரேனும் பாவத்துக்கு அஞ்சும் என்பதும்
கொள்க.
‘தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்.’
- அகநா. 4
என்பதனால் வண்டின் ஒரு சாரனவற்றிற்குச் செவியறிவும் உண்டு என்பது
கொள்க.
154
|