பக்கம் எண் :

356                      இலக

356

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

     தானைத் தலைவரையும், அரசனால் ஏவல் பெற்றோரையும், வரிசை
பெற்றோரையும், குறுநில மன்னரையும், 'மணிமுடி கவித்த மதிவெண்குடை
மன்னர்' எனப் புகழ்தலும் செய்யுள் மரபு என்பதாம்.

 

    'உண்டற்கு உரிய அல்லாப் பொருளை

    உண்டன போல உரைத்தலும் மரபே.'   

- தொல். பொ. 213

  என்பது உரையில் கொள்க.                      

(163)

  விளக்கம்

 

       இந்நூற்பா தொல்காப்பியப் பொருளதிகாரத்து 630ஆம் நூற்பா.
       இதற்கு உரையாசிரியர் ‘தலைமைக்குண முடையராகக் கூறுதலும்
தத்தமக்கு ஏற்ற நிலைமைக்குப் பொருந்துமாறு நிகழ்த்துப என்றவாறு.
எனவே இறப்ப உயர்த்தல் இறப்ப இழித்தல் ஆகாது என்றவாறாம்’ -
என்றனர்.    

- தொ. பொ. 620. உரை.

 

      பேராசிரியர் ‘அந்நான்கு சாதியார் தலைமைக் குணம்படச்
சொல்லும் அவரவர்க்கு உரிய நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்தவும் படும்
என்றவாறு. - அந்தணர் தலைமைக்குணம் கூறுங்கால் பிரமனொடு கூறியும்,
அரசரை மாயோனொடு கூறியும், வணிகரை நிதியின் கிழவனொடு கூறியும்,
வேளாண் மாந்தரை வருணனொடு கூறியும் தலைமைக் குணச்சொல்
நிகழ்த்தப்படும். அவை எல்லாம் அவரவர் செய்யுளுள் கண்டு கொள்க’
என்றார். (தொல். பொ. 430. பே.)

 

     இவ்வாசிரியர் அரசருக்குக் கீழ்பட்ட நிலையிலுள்ளாரையும்
அரசர்போல உயர்த்திக்கூறும் இலக்கியம் பலவாக உளவாதலின்
அவற்றிற்கும் விதி கூறி வாய்ப்பு அளிக்கும் முகத்தான் பயன் படுத்தக் கருதி
அரசனுக்குக் கீழ்ப்பட்ட நிலையினரையும் முகமன் பற்றி அரசனாக
வருணிப்பதற்கு இந்நூற்பா இடன் தருவதாகக் கூறியுள்ளார்.