பக்கம் எண் :

பாட்டியல் - நூற்பா எண் 181

  383


 

     இ - ள்: பலவாகிய முகத்தான் விரிந்த பொருள் இலக்கணங்களை
எல்லாம் சொல் கருவியான் அவை முற்றச் சொல்லத் தொடங்கின்
முடிவுகூடா; ஆயினும் கூறப்பட்ட பொருள் இலக்கணத்தோடும் அவற்றிற்கு
இயைபுபடநின்ற ஏனை இலக்கணத்தோடும் அமைத்துக் கேட்போர்
உள்ளத்து உண்மை உறக் கூற வல்லோர், புடவியிடைப் பகலோன்
போல விளங்கி, தம்மைப் பிரியா உரிமை உற்ற கலைமடந்தையோடும்
திருமடந்தை அவ்வாறு வதிய, மலையரசன் மகளாகிய உமாதேவியைத்
தனது ஒரு கூற்றின்கண்ணே கலந்து உலகுக்கு இன்பம் பயக்கும்
இறைவனைப் போல நெடுங்காலம் இனிது வாழ்வர். என்றவாறு

                          (181)

                ஐந்தாவது - பாட்டியல் முற்றும்.

மூன்றாவது - பொருளதிகாரம் முற்றும்.

 

இலக்கண விளக்கம் முற்றும்.

----------