பக்கம் எண் :

384                      இலக
384

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

பாட்டியல் பதிகம்

 

    பொன்மலை நின்று தென்மலை யுற்ற

    வகத்திய முனிவன் சகத்தவர்க் காகச்

    செந்தமி ழிலக்கண முந்துநூல் கிளப்பப்

    பல்கா லுன்னித் தொல்காப் பியமுனி

    இயற்றமிழ் முதலினின் றெடுத்துரைத் திடவதன்

    ஒட்பங் கண்டு தட்பங் கூராது

    ஐந்திய லுந்தம் புந்தியின் வேறுகொண்டு

    உரைத்த புலவர் வரைத்த வுரையான்

    முதலு முடிவுஞ் சிதர்தரப் பலவாய்க்

    கிடந்த வியலைத் தொடர்ந்தொரு வழிப்பட

    ஈட்டலா னிலக்கண விளக்க மென்ன

    நாட்டினன் வைத்திய நாத தேசிகன் ;

    அன்னவன் றவத்தி னாலவ தரித்த  

    முன்னவன் பாயிர மொழிந்துசொல் லணியுந்

    தற்பவ முதன்மூன் றிற்பட நாடிப்

    பகர்ந்தன னிளவல்பன் னூலு மாராய்ந்து

    உகந்துதொல் காப்பியத் துண்மை தோன்ற

    ஐந்திய லுந்தன் புந்திசான் றாகத்

    தந்தைமுன் னுரைத்தநூ றான்முடி பெய்த

    வந்த ணாரூர்ச் சந்திர மௌலி

    யருளுட் கொண்டு மருண்மன நீங்கிப்

    புலங்கொளப் பாட்டிய லிலங்க வுரைத்தனன்

    வாய்மைதரு தியாக ராய தேசிகனே.’

 

     இப்பதிகத்தை நோக்க இலக்கணவிளக்கப் பாட்டியல் வைத்தியநாத

தேசிகருடைய இளைய மகனாரான தியாகராச தேசிகரால் உரையுடன்

இயற்றப்பெற்றது என்பது புலனாகிறது. இப்பதிகத்தை இயற்றியவர் தியாகராச
தேசிகரின் மகனாரான வைத்தியநாத தேசிகர் என்பதை நோக்க மூன்று
தலைமுறையினர் தமிழ்ப் புலவர்களாகத் தொடர்ந்து விளங்கித் தமிழ்

இலக்கணத் தொண்டு செய்தமை தெளிவாகிறது.