135. ‘ஒருநெறி இன்றி விரவிய பொருளால்
பொதுமொழி தொடரின்அது படலம் ஆகும்.’
- தொல். பொ. 483
136. ‘மூன்றுறுப்பு அடக்கிய தன்மைத்து ஆயின்
தோன்றுமொழிப் புலவர்அது பிண்டம் என்ப.’
- தொல். பொ. 484
137. ‘சிதைவுஎனப் படுபவை வசையற நாடின்
(ஈரைங் குற்றமும் நேரிதின் நாடின்)
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
பொருளில மொழிதல் மயங்கக் கூறல்
கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல்
பழித்த மொழியான் இழுக்கம் கூறல்
தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்
என்ன வகையினும் மனங்கோள் இன்மை
அன்ன பிறவும் அவற்றுவிரி ஆகும்.’
-
தொல். பொ. 363
138. ‘ஒத்த காட்சியின் உத்திவகை விரிப்பின்
நுதலியது அறிதல் அதிகார முறையே
தொகுத்துச் சுட்டல் வகுத்துமெய்ந் நிறுத்தல்
மொழிந்த பொருளொடு ஒன்ற அவ்வயின்
மொழியா ததனை முட்டின்று முடித்தல்
வாரா ததனால் வந்தது முடித்தல்
வந்தது கொண்டு வாராதது முடித்தல்
முந்து மொழிந்ததன் தலைதடு மாற்றே
ஒப்பக் கூறல் ஒருதலை மொழிதல்
தன்கோள் கூறல் முறைபிற ழாமை
பிறனுடன் பட்டது தான்உடம் படுதல்
இறந்தது காத்தல் எதிரது போற்றல்
மொழிவாம் என்றல் கூறிற்று என்றல்
தான்குறி யிடுதல் ஒருதலை அன்மை
|