இயல் அமைப்பும் நுவல் பொருளும்
தனிநிலைச்செய்யுள்
அமைப்புப்பற்றிச் செய்யுளியலில் விரித்துரைத்த
ஆசிரியர் பொருள்தொடர்நிலை சொல்தொடர்
- நிலைச் செய்யுட்களைப்
பற்றியும், செய்யுள் முதற்சீர்ப் பொருத்தம் பற்றியும், அடிவரையறை
செய்யுட்களாகிய உரை நூல் பிசி முதுசொல் மந்திரம் குறிப்புமொழி
பற்றியும்,
வழக்கு செய்யுள் என்ற இருவகை மரபு இலக்கணம் பற்றியும்,
நான்கு வருணத்தவர் இலக்கணம், நால்வகைப்புலவர்
இலக்கணம்
அகலக்கவி அரங்கேற்றப்படும் அவையின் இலக்கணம், அகலக்கவியைச்
செய்துகொடுப்போர்
இலக்கணம் கொள்வோர் இலக்கணம் ஆகியவை
பற்றியும் விரித்துரைக்கும் இப்பாட்டியலை இயற்றியுள்ளார்.
செய்யுளியலின் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புக்கள் எழுத்து அசை
சீர் தளை அடி தொடை என்ற
ஆறுமே என்று வைத்தியநாதநாவலர்
கூறியிருப்பவும், இப்பாட்டியலின் தொடக்கநூற்பா ‘மாத்திரைமுதலா
யாத்து
இனிது அமைத்த பாட்டு’ என்று குறிப்பிடும் செய்தி ‘மாத்திரை எழுத்தியல்
அசைவகை எனாஅ’
தொல். செய். 1. என்ற நூற்பாவினை ஒட்டி இருத்தலை
நோக்கவும், எழுத்ததிகாரத்து 27ஆம் நூற்பாவில்
வைத்தியநாத தேசிகர்
சகரம் ஐ ஒள என்பனவற்றொடு மொழிக்கு முதலாக வாராது எனவும், யகரம்
ஆகாரம் ஒன்றுடனேயே மொழிக்கு முதலாகும் எனவும் கூறியிருப்பவும்,
எழுத்துக்களுக்கு நாள் உரிமை கூறும் இடத்து,
இப்பாட்டியலில்
|