பக்கம் எண் :

New Page 1

40                    

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


         

 

     முடிந்தது காட்டல் ஆணை கூறல்

     பல்பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்

     தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்

     மறுதலை சிதைத்துத் தன்துணிபு உரைத்தல்

     பிறன்கோள் கூறல் அறியாது உடன்படல்

     பொருள்இடை இடுதல் எதிர்பொருள் உணர்த்தல்

     சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்தல்

     தந்துபுணர்ந்து உரைத்தல் ஞாபகம் கூறல்

     உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு மெய்ப்பட நாடிச்

     சொல்லிய அல்ல பிறஅவண் வரினும்

     சொல்லிய வகையான் சுருங்க நாடி

     மனத்தின் எண்ணி மாசுஅறத் தெரிந்துகொண்டு

     இனத்தில் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்

     நுனித்தகு புலவர் கூறிய நூலே.’       

- தொல். பொ. 665

 

140.  ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

     முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்.’

                                      - தொல். பொ. 649

 

141.  ‘வழிஎனப் படுவது அதன்வழித் தாகும்.’

                                      - தொல். பொ. 650

 

     ‘தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து

     அதர்ப்பட யாத்தலோடு அனைமர பினவே.’

                                      - தொல். பொ. 652

(இவ்விரு நூற்பாக்களும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.)

 

143.  ‘பாட்டிடை வைத்த குறிப்பி னாலும்

     பாஇன்று எழுந்த கிளவி யானும்

     பொருளொடு புணராப் பொய்மொழி யானும்

     பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும்என்று

     உரைவகை நடையே நான்கென மொழிப.’

                                      - தொல். பொ. 485