பக்கம் எண் :

New Page 1

பாட்டியல் -முன்னுரை

41


            

144.  ‘ஒப்பொடு புணர்ந்த உவமத் தானும்

     தோன்றுவது கிளந்த துணிவி னானும்

     என்றுஇரு வகைத்தே பிசிவரு நிலையே.’

                                      - தொல். பொ. 488

 

 

145.  ‘நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும்

     மென்மையும் என்றுஇவை விளங்கத் தோன்றிக்

     குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

     ஏது நுதலிய முதுமொழி என்ப.’       

 - தொல். பொ. 489

 

146.  ‘நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளந்த

     மறைமொழி தானே மந்திரம் என்ப.’

                                      - தொல். பொ. 490

 

147.  ‘எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்

     பொருட்புறத் ததுவே குறிப்புமொழி என்ப.’

                                      - தொல். பொ. 491

 

149.  ‘வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே

     நிகழ்ச்சி அவர்கட்டு ஆக லான.’

                                      - தொல். பொ. 647

 

150.  ‘பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்

     கன்றும் பிள்ளையும் மகவும் மறியும்

     ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே.’

                                      - தொல். பொ. 556

 

(குழவியும் என்றிவை)

 

151.  ‘சொல்லிய மரபின் இளமை தானே

     சொல்லுங் காலை அவையலது இலவே.’

                                      - தொல். பொ. 581