152. ‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனன்என
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தனரே.’
- தொல். பொ. 582
156. ‘ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்
சேவும் சேவலும் இரலையும் கலையும்
மோத்தையும் தகரும் உதளும் உம்பலும் (அப்பரும்)
போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்
யாத்த ஆண்பால் பெயர்என மொழிப.’
- தொல். பொ. 557
157. ‘பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்
மூடும் நாகும் கடமையும் அளகும்
மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்
அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே.’
- தொல். பொ. 558
158. ‘புறக்கா ழனவே புல்என மொழிப.’
- தொல். பொ. 640
159. ‘அகக்கா ழனவே மரம்என மொழிப.’
- தொல். பொ. 640
160. ‘தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலைஎன நேர்ந்தன பிறவும்
புல்லொடு வரும்எனச் சொல்லினர் புலவர்.’
- தொல். பொ. 641
|