பன்னிரு பாட்டியல்
இலக்கணவிளக்கப் பாட்டியலில் கூறப்படாதனவாகப் பன்னிரு
பாட்டியலில்
காணப்படுவன பின்வருமாறு:
கன்னல்
72. ‘குணபால் பரிதி தென்பால் இயமன்
குடபால் வருணன் வடபால் சோமன்
திசைமுகன் நடுவாம் தெய்வ நிலைகளில்
குறில்ஐந்து அமைத்துமுதல் மூன்றும் கொள்கென
நெறியறி புலமை அறிஞர்நேர்ந் தனரே.’
73. ‘அருக்கன் இயமன் வருணன் சோமன்
பிரமனும் தெய்வ நிலையெனப் பேசுவர்.’
74. ‘அகரமுத லாக முறையான் எய்தஅத்
தெய்வம் தம்மேல் வைக்கப் படுமே.’
- கபிலர்
75. ‘உரைத்த குறில்ஐந்து ஒரோஒன் றாக
அருக்கனொடு ஆரும் அவ்வாறு நாழிகை.’
76. ‘அகரம் தானே அருக்கனோடு உதிப்ப
இகரம் இன்புறவு எய்தி இருக்கும்
உகரம் நடக்கும் எகரம் உறங்கும்
ஒகரம் துஞ்சும்என்று உரைத்தனர் புலவர்.’
77. ‘அவர்அவர் பெயர்முதல் எழுத்துவந்து உதிப்ப
அவர்அவர்ப் பாடின் ஆக்கம் தருமே.’
- இந்திரகாளியார்
78. ‘இராப் பொழுதிற்கும்
இவ்வகை கொள்க.’
|