பக்கம் எண் :

New Page 1

பாட்டியல் -முன்னுரை

45


            

புள்

 

79.   ‘ஐவகைக் குறிலும் அகரமுத லாக

     வல்லூறு ஆந்தை வலியன் குருகே

     மெல்லியல் மயிலென விளம்பினர் இவற்றின்

     பொருத்தமும் விருத்தமும் பகையும் பலனும்

     விரித்துஇனிது எண்ணி மேவினர் கொளலே.’

 

80.   ‘எண்ணப் பட்ட அகரமுதல் ஐந்தும்

     வல்லூறு ஆந்தை வலியான் குருகே

     மெல்லியல் மயிலென விளம்பிய இயற்கையின்

     புள்என விளம்பும் புலவரும் உளரே.’            

- பரணர்

 

பெயர்ப்பொருத்தம்

 

144.  ‘எண்வகைப் பெயரும் நண்ணுதல் செப்பின்

     குலம்குடி கோத்திரம் நலம்பெறு குணமே

     மனமே ஆணை மன்னிய சிறப்பே

     இயற்பெயர் என்றிவை தம்முள் இயன்ற

     சிறப்புஇயற் பெயர்எனும் இருதிறத் திற்கும்

     மயக்குஅற மொழிமுதல் எடுக்கும் சொல்லுடன்

     பொருத்தம் கொள்வர் கருத்துஉணர்ந் தோரே.’

 

145.  ‘பார்ப்பார் அரசர் வணிகர்வே ளாளரெனப்

     பாற்படு நாற்பெயர் குலப்பெய ராகும்.’

 

146.  ‘குடிப்பெயர் ஆவன கூறுங் காலைச்

     சேரன் சோழன் பாண்டியன் என்றுஇவை

     போல்வன பிறவும் பொருத்தம் கொளலே.’

 

147.  ‘கோத்திரப் பெயரே கூறுங் காலைச்

     தாதைகுடிப் பெயரைத் தக்கவற்று இயற்றல்.’

 

148.  ‘குணப்பெயர் ஏனைப் புலவோர் கொடுப்பத்

     தணப்பில வாகித் தழுவும் பெயரே.’