பக்கம் எண் :

New Page 1

46                   

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


         

149.  ‘மனப்பெயர் ஆவன தனக்குத் தானே

           எனக்குஇது வேண்டும்என்று எய்தும் பெயரே.’

           (இஃது இராசாக்கணாயனடியார் தோழன்)

 

150.  ‘ஆணைப் பெயரே வலியோர் அஞ்சப்

           பேணி உலகம் பேசும் பெயரே.’

 

151.  ‘சிறப்புப் பெயரே தெரியுங் காலைச்

           சிறப்புடை வேந்தன் கொடுக்கும் பெயரே.’

 

152.  ‘சாதியில் உள்ளோர் தமக்குத் தாமே

           நீதிகொள் சிறப்புஇயற் பெயர்கொளற்கு உரியர்.’

 

153.  ‘முடியுடை வேந்தன்முற் குலத்தோர்க்கு அல்லது

           பட்டமும் பூணும் பூவும் ஆழியும்

           நட்டமில் நலமலி சிறப்புப் பெயரும்

           கொடாஅன் எனமொழிப குலமொழிப் புலவர்.’

 

154.          ‘வினைசெயல் மருங்கின்மிக் கோரும் பெறுப.’

 

155.  ‘தந்தை மகப்பெயர் முந்திய குலப்பெயர்

            மனப்பெயர் கோத்திரக் குலப்பெயர் ஆணை

            இயற்பெயர் சிறப்புடைப் பெயர்இரண் டாகும்,

            கயக்கறு முதன்மொழிப் பொருத்தம் கொளலே.          

 1

 

     ‘கோத்திரப் பெயரே கூறுங் காலை

            காப்பியன் கவுணியன் காசிபன் என்றிவை

            போல்வன பிறவும் பூசுரர்க்கு ஆகும்.’                 

 2

 

     ‘அரசர் கோத்திரப் பெயரே கூறின்

            குடிப்பெயர் அதனை வைத்தவர்க்கு இயற்றல்.’          

 

3

 

     ‘தந்தையர் பெயர்வழிப் பெயரன்பெயர் என்று

           சிந்தித்து இடுவது இயற்பெயர் ஆகும்.’                

4

 

     ‘தந்தைக்கு முந்திய தெய்வப் பெயரும்

          மிக்கோர் பெயரும் விதியில் புனைவது

          இயற்பெயர் என்ப இயல்புஉணர்ந் தோரே.’                 

5