‘எண்வகைப் பெயரின் இருமூன்று பெயர்ஒழித்து
இயற்பெயர் சிறப்புப் பெயர்இரண் டிற்கும்
மயக்குஅறு மொழிமுதல் பொருத்தம் கொளலே.’
6
‘பாடும் குரிசில் இயற்பெயர்க்கு முன்வந்து
கூறும் குறிநிலை கொண்டு சிறப்பின்
ஆகிய பாலர் ஆதி பெயர் ......
நீக்கி இயற்பெயர் கொண்டமுதல் எழுத்து
நின்ற நிலனே பாலன் ஆகத்
தென்தமிழ்ப் புலவர் திண்ணிதின் கொளலே.’
7
இனவியல்
156. ‘வெள்ளை அகவல் துள்ளுகலி வஞ்சி
என்னும் நாற்பா இவற்றுடன் இயன்மருள்
தாழிசை துறைவிருத் தங்கள்என்று இவற்றின்
சூழ்வகை இனம்பல சொல்லுதல் இனவியல்.’
157. ‘ஒன்றே ஆகியும் ஒன்றுபல ஆகியும்
பலஒன்று ஆகியும் பாற்படும் இனமே.’
158. ‘அவற்றுள்,
ஒன்றா கியஇனம் எனப்பட் டனஉலா
ஆற்றுப் படைவகை மடல்முத லாயின.’
159. ‘ஒன்றுபல ஆகிய இனம்அந் தாதி
கோவை காப்பியம் ஆதியாக் கூறுவன.’
160. ‘பலஒன் றாகிய இளம்எனப் பட்டன
கலித்தொகை குறுந்தொகை நெடுந்தொகை முதல.’
161. ‘பலஒன் றாகிய இனம்எனப் பட்டன
கலம்பகம் மும்மணிக் கோவைமுத லாயின.’
|