48
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
சாதகம்
173. ‘தோற்றிய சாதகம்
சாற்றுங் காலைப்
பற்றிய கலியுகத்து உற்ற
ஆண்டில்
திருந்திய சகாத்தமும்
ஆண்டும் பொருந்திய
ஞாயிறும் பக்கமும் மேய
வாரமும்
இராசியும் மன்னுற மொழிதற்
குரிய.’
வேந்தன் குடை மங்கலம்
199. ‘முன்னீர டியினும்
குடைத்தொழில் இயம்பியும்
பின்னீ ரடியில் தனிநிலை
இரட்டியும்
கொற்றவற் புகழ்ந்து குடைஎன
முடிக்கும்
நற்றிற நேரிசைக் குடைவெண்
பாட்டே.’
200. ‘அதுவே,
குடைச்சொல் சிந்தடி
ஈற்றில்வைத்து அந்தக்
குடைச்சொல் ஆதிக்
குறளகத்து அடக்கி
ஈற்றயல் அடியினும்
ஈற்றினும் இறைவனைப்
போற்றிப் புகழ்ந்து புகறல்
வேண்டும்.’
- இந்திரகாளியார்.
201. ‘ஒட்டிய குடைப்பொருள்
உரைக்கும் நேரசை
கட்டளை ஆகுதல் கடன்என
மொழிப.’
202. ‘கட்டளை என்பது கருதுங்
காலை
ஈற்றடி ஒழிய ஏனைமூன்று
அடியும்
பாற்படும் எழுத்தின்
பகுதிஒப் பதுவே.’
203. ‘இதற்கே யாம்எழுத்து
எண்ணுங் காலை
குற்றிய லிகரமும் குற்றிய
லுகரமும்
ஒற்றும் ஒழித்துயிர்
உயிர்மெய்யும் கொளலே.’
204. ‘மோனையும் எதுகையும்
தொடையென மொழிப.’
|