பக்கம் எண் :

New Page 1

பாட்டியல் - முன்னுரை     

49


 

205.  ‘சாற்றியமா றொத்தல் தனிமை மிகுதிசமம்

     போற்றுமுடம் பாடு புலனுண்மை - ஏற்றும்

     தலைப்பாடு பாதி தருகொடை பத்து

     நிலைப்பாடு நேரசை யாம்.’

 

     ‘கொடைமங் கலப்பொருள் குறித்த நேரிசைத்

     தொடைஅமை வெள்ளை சுடர்முடி சூடிய

     மொய்கழல் மன்னைமுன் பாடும் கவிஎன

     மையறு புலவர் வகுத்துரைத் தனரே.’

 

ஒருபோகு

 

206.  ‘தன்மை முன்னிலை படர்க்கையுள் தன்மை

     ஒழித்திரு வகையுள் ஒன்றால் கடவுள்

     பழிச்சும் ஒருபோகு இருமூன்று உறுப்பும்

     அமைந்துஒருங்கு இயலும் நயம்திகழ் கலியுள்

     வண்ணகம் போதினும் எண்ணே போதினும்

     ஓதிய உறுப்பால் பேர்புகன் றனரே.’

 

207.  ‘வரன்முறை பிறழ உறுப்பு மயங்கி

     மிக்கும் குறைந்தும் வருவது கொச்சக

     ஒருபோ காமென உரைத்தனர் புலவர்.’

 

208.  ‘கொச்சகத் தன்மையின் கொச்சகம் என்ப.’

                                       - நற்றத்தனார்.

 

209.  ‘தேவப் பிரணாமம் எனும்வட மொழியைத்

     தேவபா ணியெனத் திரித்துவழங் கினரே.’

                                      - செயிற்றியனார்.

 

210.  ‘தேவ பாணி தெரியுங் காலை

     மாசறு துழாய்முடி மலைந்த சென்னி

     நீள்நிலம் அளந்த நெடியோன் மேற்றே.’

 

211.  ‘சுடர்கதிர்த் திங்கள் சூடி யோற்கும்

     படர்திரைப் பனிக்கடல் மாதடிந் தோற்கும்

     உரிய காலமும் உளஎன மொழிப.’                  

- செயிற்றியனார்.

     7 - 8