‘சகர வருக்கந் தனில்முதல் நான்கும்
புகலுங் காலை புருட நாள்;மேல்
ஐந்து மூன்றச் சுவினி பரணி.’
- 28
‘உற்றயா ஒன்றும் உத்திரட் டாதி;
யூயோ இரண்டும் ஏயும் மூலம்.’
- 34
என சை, சௌ என்பனவும் யூயோ என்பனவும் மொழிக்கு முதலாம் என்று
கூறப்பட்டிருத்தலை நோக்கவும்,
‘பொன்மலை நின்று’ என்ற பதிகம்
குறிப்பிட்டுள்ளபடி,
‘இளவல்பன் நூலும் ஆராய்ந்து
உகந்துதொல் காப்பியத் துண்மை தோன்ற
ஐந்திய லுந்தன் புந்திசான் றாகத்
தந்தைமுன் உரைத்தநூல் தான்முடிவு எய்த
அந்தண் ஆரூர்ச் சந்திர மவுலி
அருள்உட் கொண்டு மருள்மனம் நீக்கி
புலங்கொளப் பாட்டியல் விளங்க உரைத்தனன்
வாய்மைதரு தியாக ராயதே சிகனே.’
என்ற கருத்தான் பாட்டியலை வரைந்தவர் வைத்தியநாத தேசிகரின்
மகனார் தியாகராய தேசிகராவார்
என்பது வலியுறுகிறது.
செய்யுள் என்பது எழுவகைப்படும்; அவ்வகையுள் முதலாவது
பாட்டாகும். பாட்டுஎன்பது பரந்துபட்டுச்
செல்வதோர் ஓசைத்
தொகுதியாகிய பா என்ற உறுப்பினை உடையது.
அப்பாட்டு ஆசுகவி மதுரகவி சித்திரகவி வித்தாரகவி என்று
நான்குவகைப்படும்.
ஆசுகவி
புலவன் ஒருவன் இன்ன
எழுத்து இன்னசொல் இன்ன பொருள்
இன்னயாப்பு இன்னஅணி இன்னஎழுத்துமுதல் இன்னஎழுத்துஇறுதி
என்றுகொண்டு
பாடுக என்று சொல்லிய அப்பொழுதே அவன்
கூறியாங்குப் பாடுவது ஆசுகவியாம்.
|