பக்கம் எண் :

New Page 1

50          

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

212.  ‘வேந்தன் வேண்டும் நெறிசெய் தாலும்

     வாய்ந்த மதியும் மரபும் வாழ்த்தலும்

     விதிஎன மொழிப மெய்நெறிப் புலவர்.’

  

மறம்

 

250.  ‘பெருநில வேந்தன் மகட்பால் வேண்டி

     ஒருபெருந் தூதன் உரைத்தமொழி கேட்டுக்

     குறுநில மறவன் வெஞ்சினம் திருகி

     மாற்றம்மிக உரைப்பது மறம்என மொழிப.’

 

     ‘கூடாக் குலமுதல் மன்னன் மகள்வேண்டத்

     தாதையும் தாயும் தன்னையர் அனைவரும்

     மாறுசொல் மகட்பால் காஞ்சியும் மறனே.’

 

கலம்பகமாலை

 

260.  ‘ஒருபோ குடனே அம்மனை நீக்கி

     வெள்ளை முதலா எல்லா உறுப்பும்

     தள்ளா இயலது கலம்பக மாலை.’

 

261.  ‘ஒருபோகு அம்மனை ஒழித்துவெண் பாமுதல்

     கருதின் பேரது கலம்பக மாலை.’                        

- பி. தீ. 12

 

கலியந்தாதி

 

265.  ‘வல்லினம் மெல்லினம் இடையின எழுத்துப்

     புல்லி மருங்கு போகாது ஒன்றிக்

     குறிலெனின் குறிலே நெடிலெனின் நெடிலே

     பொருந்தி நாற்கலை கொண்டுஓர் அடியாய்த்

     திருந்தும் இவ்வகை நான்கடி யாகியும்

     ஓரொலி ஆகியும் எண்ணான்கு ஆகிய

     கலையொடு பொருந்தியும் குறிலும் குறிலும்

     நெடிலும் நெடிலும் இம்முறை முதல்வர

     அவ்வெழுத்து ஆகியும் இப்பரிசு இயன்ற

     முப்பது கட்டளை கலிஅந் தாதி

     ஆகும் பெயர்என்று அறைதல் வேண்டும்.