ஐம்படை விருத்தம்
291. ‘சக்கரம் தநுவாள் சங்கொடு
தண்டுஇவை
ஐம்படை அகவல் விருத்தம்
ஆகும்.’
இல்லற வெள்ளை
301. ‘கலைதரு வண்ணமும்
வெள்ளையும் ஒன்பான்
நிலைபெறப் புணர்ப்பின்அஃது
இல்லற வெள்ளை.’
(கலைதரு வண்ணம் என்றதனால்
வெண்கலிப்பா ஒன்றானும் நிலைபெற
என்றதனால் சந்தவகை ஒன்பதினாலும் வெண்பா ஒன்பதினாலும்
பாடுவாரும் உளர்.)
தாரகைமாலை
305. ‘இரண்டு பொருள்புணர்
இருபத் தெழுவகைச்
சீரிய பாட்டே தாரகை
மாலை.’
(இஃது இலக்கண விளக்கப்
பாட்டியல் கூறும் தாரகை மாலையின் வேறாயது.)
செந்தமிழ்மாலை
306. ‘எப்பொரு ளேனும் இருபத்
தெழுவகை
செப்பிய நெறியது செந்தமிழ்
மாலை.’
தாண்டகம்
307. ‘மூவிரண் டேனும் இருநான்
கேனும்
சீர்வகை நாட்டிச் செய்யுளின்
ஆடவர்
கடவுளர்ப் புகழ்வன தாண்டகம்
அவற்றுள்
அறுசீர் குறியது நெடியதுஎண்
சீராம்.’
308. ‘அறுசீர் எண்சீர் அடிநான்கு
ஒத்துஅங்கு
இறுவது தாண்டகம் இருமுச்
சீரடி
குறியது நெடியது இருநாற்
சீரே.’
- பல்காயனார்
309. ‘மங்கல மரபின் மானிடர்
கடவுளர்
தம்புகழ் உரைப்பது தாண்டக
வகையே.’
|