பக்கம் எண் :

52                      இலக
52

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

310.  ‘தாண்டகம் மானிடர் கடவுளர்க்கு உரித்தே.’

- மாபூதனார்.
 

311.  ‘அடிவரை நான்கும் வரும்எழுத்து எண்ணி
     நேரடி வருவது தாண்டகம் ஆகும்.’           

  - சீத்தலையார்.
 

 பதிகம்

 

312.  ‘ஆசிரி யத்துறை அதனது விருத்தம்

     கலியின் விருத்தம் அவற்றின் நான்கடி

     எட்டின் காறும் உயர்ந்த வெண்பா

     மிசைவைத்து ஈரைந்து நாலைந்து என்னப்

     பாட்டுவரத் தொடுப்பது பதிகம் ஆகும்.’

 

செருக்களவழி

 

315.  ‘தலைவன் செய்த நிலைபெறு புகழ்புனை

     நேரிசை வெண்பா இன்னிசை வெண்பாப்

     பஃறொடை வெண்பா மறக்கள வழியே.’

 

316.  ‘நேரிசை இன்னிசை பஃறொடை வெண்பா

     போரின் களவழி புகலப் படுமே.’

 

செருக்களவஞ்சி

 

319.  ‘விருத்தவகை பத்தான் விளம்பும் அதனைச்

     செருக்களம் எனவே செப்பினர் புலவர்.’

     ‘செருக்கள வஞ்சியாம் செருமுகத்து ஆயவை

     சுருக்கிய வஞ்சி தொடுத்துப் பாடலே.’

                                      - தொ. வி. 270

 

மறக்களவஞ்சி

 

317.  ‘குறள்சிந்து அளவடி அகவல் அடிவிராய்
     வஞ்சிச் செய்யுளின் மன்னவர் மறக்களம்
     எஞ்சாது உரைப்பது மறக்கள வஞ்சி.’
 

318.  ‘இயங்குபடை மன்னர் இகற்களம் புகழ்ந்த
     மயங்கியல் வஞ்சி மறக்கள வஞ்சி.’