பக்கம் எண் :

54                  

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

பறைநிலை

 

329.  ‘காவலர் இனிதுறத் தேவர்காத்து அளிக்கஎனக்

     கடவுளர் விழவினும் கதிர்முடி விழவினும்

     நாடும் நகரமும் நலம்பெற இயம்பி

     வருநெறி வஞ்சி வழங்கப் பற்றிய

     மொழிவரத் தொடுப்பது பறைநிலை ஆகும்.’

 

அந்தாதித்தொகை

 

330.  ‘வெண்பாக் கலித்துறை வேண்டிய பொருளின்

     பண்பா உரைப்பதுஅந் தாதித் தொகையே.’

 

புறநிலை வாயுறை செவியறிவுறூஉ

 

331.  ‘புறநிலை வாயுறை செவியறி வுறூஉஎனத்

     திறமையின் மருட்பாச் செய்யுளின் வருமே.’

 

உழத்திப்பாட்டு

 

335.  ‘புரவலற் கூறி அவன்வா ழியவென்று

     அகல்வயல் தொழிலை ஒருமை உணர்ந்தனள்

     எனவரும் ஈரைந்து உழத்திப் பாட்டே.’

 

குறத்திப் பாட்டு

 

336.  ‘இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும்முக் காலமும்

     திறப்பட உரைப்பது குறத்திப் பாட்டே.’

 

337.  ‘குறத்திப் பாட்டும் அதனோ ரற்றே.’ (10 பாடல்கள்)

 

கணக்கு

 

344.  ‘மேல்கீழ்க் கணக்கென இருவகைக் கணக்கே.’

    

345.  மேற்கணக்கு எனவும் கீழ்க்கணக்கு எனவும்

     பாற்படு வகையான் பகர்ந்தனர் கொளலே.’