பக்கம் எண் :

பாட்டியல் - முன்னுரை

55


 

346. ‘அகவலும் கலிப்பா வும்பரி பாடலும்

     பதிற்றைந் தாதி பதிற்றைம்பது ஈறா

     மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக்கு எனவும்

     வெள்ளைத் தொகையும் அவ்வகை எண்பெறின்

     எள்ளறு கீழ்க்கணக்கு எனவும் கொளலே.’

 

347. ‘ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா

     ஐவகைப் பாவும் பொருள்நெறி மரபின்

     தொகுக்கப் படுவது மேற்கணக்கு ஆகும்.’

 

348. ‘அடிநிமிர்பு இல்லாச் செய்யுள் தொகுதி

     அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வத்

     திறம்பட உரைப்பது கீழ்க்கணக்கு ஆகும்.’

 

பாட்டு

 

353. ‘நூறடிச் சிறுமை நூற்றுப்பத்து அளவே

     ஏறிய அடியின் ஈரைம் பாட்டுத்

     தொகுப்பது பத்துப் பாட்டெனப் படுமே.’

 

     354.      ‘அதுவே, அகவலின் வருமென அறைகுநர் புலவர்.’

 

கடைநிலை

 

355. ‘கடைநிலை என்பது காணுங் காலை

     பரிசில் உழப்பும் குரிசிலை முனிந்தோர்

     கடையகத்து இயம்பும் காட்சித்து என்ப.’

 

356. ‘பரிசில்நீட் டித்தல் அஞ்சி வெறுத்தோர்

     கடைநின்று உரைப்பது கடைநிலை என்ப.’

     (கடைஎனினும் அங்கதம் எனினும் ஒக்கும்)

 

கையறுநிலை

 

357. ‘வலங்கெழு வேந்தன் வான்புகக் கவிஞர்

      கலங்கித் தொடுப்பது கையறு நிலையே.’

 

358. ‘வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின்

      கற்றோர் உரைப்பது கையறு நிலையே.’

 

359. ‘கலியொடு வஞ்சியில் கையறவு உரையார்.’