பக்கம் எண் :

56                      இலக

56

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

நவநீதப் பாட்டியல்

 

     இலக்கண விளக்கப் பாட்டியலில் கூறப்படாதனவாக நவநீதப்
 பாட்டியல் மிகைச்செய்யுட்கள் கூறும் பிரபந்த வகைகள் பின் வருமாறு:-

 

வருக்கக்கோவை

 

3.   ‘பாடும்மொழிக்கு முதலாம்எழுத்து அம்முறைபிறழாக்
     கோடல்வரக் காரிகை வருக்கக்கோவை.’

 

பவனிக்காதல்

 

10.   ‘செயல்மீறச், சீரைப் பிறர்க்கு உரைத்தால் பவனிக்காதல்.’

 

பெருமங்கலம்

 

19.   ‘ஆழ்சிறை மீட்டல் முதல் காரணமான நாள்நிகழ

     வாழ் வெள்ளணியைச் சொலல் பெருமங்கலம்.’

 

குறவஞ்சி

 

20.   ‘தலைவன் பவனிவரல் நங்கை காமம்உறல் மோகினி

      வரல்உலாப் போந்தோனவனைத் தெரியமாலாய் மதித்துஎன்

      றலும்முதலியவும் ஆலம்பனம் பாங்கி வினாவல் உரைத்

      தலும் அவனைப்பழித்தல் புகழ்தல் தூது வேண்டலுமே.’

 

21.   ‘அவன் அடையாளம் குறத்தி வரல் கல்வளம் வினாச்சொல்

      உவன் ஊர் கிளைவளம் சொற்குறி சொன்னவை கூறல்வினா

      அவள்தேப்பரவல் குறி நல்வரவு பரிசில் ஈ கு

      றவன் வரல் புள்வரல் கண்ணி குத்தல் புள்படுத்தலுமே.’

 

22.   ‘குறத்தியைக் காமுற்றுத் தேடல் குறவன்நற் பாங்கனொடு

      குறத்தி அடையாளம் கூறல் குறவன்குறத்தி காண்டல்

      குறவன் அணிமுதற் கண்டு ஐயுறவினாவல் உரைத்தல்

      குறத்தி இவை உறுப்பு எஞ்சாப் பாவான் குறவஞ்சியதே.’

 

    வீரமாமுனிவருடைய தொன்னூல் விளக்கத்து 283ஆம் நூற்பாவில் உரைநடையாக வரையப்பட்ட பிரபந்த இலக்கணம்