6 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
மதுரகவி
சொல் பொருள் தொடை அணி ஓசை என்பன இன்பமுறப்
பொருந்தப் பாடப்படுவது மதுரகவி.
சித்திரகவி
சித்திரகவியாவது மடக்கும் கோமூத்திரிகை முதலியனவுமாகச்
சொல்லணியில் கூறப்பட்டனவாம்.
வித்தாரகவி
வித்தாரகவியாவது செய்திகளை விரிவாகப்பாடும் பாடலாகும். அது
பாட்டுக்கள்
பொருள் தொடர்புஉறப் பலவாகத் தொடர்ந்து வரும்
தொடர்நிலை, பல அடிகளாக அமைந்த ஒரே பாடல்
ஆகிய தனிநிலை
என இருவகைப்படும். அவற்றுள் தொடர்நிலைச் செய்யுளின் வகைகள்
கணக்கில் அடங்கா.
பொருத்தம் பத்து
வித்தாரகவியை அமைக்கும்போது, அதன்முதற்பாடலின் முதற்சீர்க்கும்
அக்கவியைக்
கொள்ளும் பாட்டுடைத் தலைவன் பெயருக்கும்
பொருத்தங்கள் பத்து ஆகும். அவை முறையே
மங்கலம் சொல் பால்
வருணம் உண்டி தானம் அக்கரம் நாள் கதி கணம் என்பனவாம்.
1. மங்கலம்
சீர் பொன் பூ மணி திங்கள் பரிதி கார் திரு எழுத்து கங்கை யானை
கடல் நிலை மா உலகம் சொல் நீர் தேர் அமுதம் புகழ் நிலம் ஆரணம்
கடவுள் திகிரி முதலியனவும் இவற்றின் பொருள் தரும் ஏனைய சொற்களும்
முதற் சீர்க்கு மங்கலச் சொற்களாம்.
2. சொல்
முதற்சீராக அமையும் சொல் விழுமிய பொருள் தெரிவித்தல் வேண்டும்;
பல வேறுபட்ட
பொருள்செய்ய இடம் தருதல் கூடாது. வகையுளியாக
அமைதல் கூடாது; ஈறுதிரியவும் கூடாது. இவ்வாறு
அமைதலே
சொல்பொருத்தமாம்.
|