தசாங்கத்தயல்
பெறுமன்பல் அங்கத்தை ஆசிரியம் ஈரேழு பேசல்
தசாங்கத்தயல். - 24
அரசன் விருத்தம்
பத்துக்கலித்துறையும் முப்பதுவிருத்தமும் பகர்கலித்
தாழிசையுமாய்ப்
பகர்நாடு மலைகடல் நிலவருணனைநீடு பரவுதோள்
வாண்மங்கலம்
பெற்றிடப் பாடிமுடி வேந்தர்க்கு உரைப்பதாய்ப்
பேசல் அரசன்விருத்தம். - 24
கையறுநிலை
அவனியின் கணவனோடு இல்லாள் கழிந்துழி அவர்
கடப்பட்ட வழுவின்
அப்பொருளெல்லாம் பிறர்க்கு அறிவுறுத்து
அப்போது இறந்தேபடாது
அவர்தாம் ஒழிந்தபல ஆயத்தார்களும் பரிசில்பெறும்
விறலி யோரும்
செயல் தனிப் படர் உழந்திடு செயலின் அறுநிலை
செப்பிடும் கையறுநிலை - 25
பதிகம்
ஒரு பொருளைக் குறித்துப் பன்செய்யுள் பதிகம் - 26
பிரபந்த மரபியல்
கையறத்துக்கு ஆகாப் பா
‘கலியும் வஞ்சியும் கையறம் உரைத்தற்கு
ஆகா என்ப அறிந்திசி னோரே’
வாழ்த்துப் பற்றிய பா
‘எவையும்வாழ்த் தினுக்கா மேவும் பாவே’
|