62 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
முத்துவீரியம்
இலக்கணவிளக்கப்பாட்டியலில் கூறப்படாதனவாய் முத்துவீரியம்
கூறுவன பின்வருமாறு:
[முத்துவீரியம் - யாப்பதிகாரம் - ஒழிபியல்நூற்பாக்கள்]
வித்தாரகவி ஆவான் இலக்கணம்
59. ‘மறம்கலி வெண்பா மடலூர்தல் இயல்இசை
பாசண் டத்துறை பன்மணி மாலை
தசாங்கம் மும்மணிக் கோவை கிரீடை
இவைமுத லாக விரித்திசைத்துப் பாடுவான்
வித்தா ரக்கவி யாம்விளம் பிடினே.’
சாதகக்கவி
60. ‘ஓரை திதிநிலை யோகம் நாள் மீன்நிலை
வாரம் கரணம் நிலைவரு கிரகம்
நிலைஎழு அவயவம் நிலையையும் உணர்வுற்று
அவற்றை அமைத்துஅவற் றால்தலை மகனுக்கு
அடைவன அறைதல்சா தகமென மொழிப.’
மணிமாலை
95. ‘எப்பொருள் மேலும் வெண்பா இருபதும்
கலித்துறை நாற்பதும் கலந்து வருவது
மணிமாலை ஆகும் வழுத்துங் காலே.’
- தொ. வி. 279
பெருமகிழ்ச்சிமாலை
97. ‘தெரிவை எழில்குணம் ஆக்கம்சிறப்பு உரைப்பது
பெருமகிழ்ச்சி மாலைஎனப் பேசப் படுமே.’
- தொ. வி. 283. உரை.
தண்டகமாலை
107. ‘வெண்பா வான்முந் நூறு விரிப்பது
தண்டக மாலையாம் சாற்றுங் காலே.’
- தொ. வி. 283. உரை.
|