பக்கம் எண் :

பாட்டியல் - முன்னுரை

 63


 

வீர வெட்சிமாலை

 

108.  ‘ஆனிரை கவர்ந்து வருபவன் வெற்றி

     விளம்புதல் வீர வெட்சி மாலை.’

                                  - தொ. வி. 283. உரை.

 

வெற்றிக் கரந்தை மஞ்சரி

 

109.  ‘தழுவார் கொண்ட தம்நிரை மீட்போர்

     கரந்தை புனைந்து கனன்றுஉல வையின்செலீஇ

     மீட்பதைக் கூறல் வெற்றிக் கரந்தை.’                                  - தொ. வி. 283. உரை.

 

போர்க்கெழு வஞ்சி

 

110.  ‘போர்க்கெழு மன்னவன் வஞ்சிப் பூந்தொடை

     அணிந்து புறப்படும் அடுபடை எழுச்சிச்

     சிறப்புஅக வலினால் செப்புதல் போர்க்கெழு

     வஞ்சி எனப்பெயர் வைக்கப் படுமே.’

                                  - தொ. வி. 283. உரை.

  

காஞ்சி மாலை

 

113.  ‘காஞ்சி புனைந்து கருதார் ஊர்ப்புறம்

     ஊன்றலை உரைப்பது காஞ்சி மாலை.’

                                  - தொ. வி. 283 உரை.

 

நொச்சி மாலை

 

114.  ‘கோலிய மாற்றார் கோடல் இன்றி

     நொச்சி வேய்ந்தகல் எயில்நோக்குந் திறனை

     வழுத்துதல் நொச்சி மாலை ஆகும்.’

                                  - தொ. வி. 283 உரை.

 

உழிஞை மாலை

 

115.  ‘மாற்றார் ஊர்ப்புறம் வளைதர உழிஞை

     வனைந்து காலான் வளைப்பது கூறல்

     உழிஞை மாலையாம் உணருங் காலே.’

                                  - தொ. வி. 283 உரை.