பக்கம் எண் :

64

64                   

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

தும்பை மாலை

 

116.  ‘தும்பைவேய்ந்து ஒன்னாரொடு சூழ்ந்து பொருவது

     சொல்வது தும்பை மாலை ஆகும்.’

                                  - தொ. வி. 283 உரை.

  

வாகை மாலை

 

117.  ‘மாற்றாரை வென்று வாகைசூ டுவதை

     அகவலினால் அறைவது வாகை மாலை.’

 

தோரண மஞ்சரி

 

118.  ‘யானைவயப் படுத்தி அடக்கி னவருக்கும்

     எதிர்பொரும் யானையை ஈர வெட்டி

     அடக்கின வருக்கும் அதட்டிப் பிடித்துச்

     சேர்த்த வருக்கும் வீரச் சிறப்பை

     வஞ்சியால் பாடுவது அதுவாம் தோரண

     மஞ்சரி எனப்பெயர் வைக்கப் படுமே.’

                                  - தொ. வி. 283 உரை.

 

கண்படைநிலை (வேறு)

 

130.  ‘அரசரும் அரசர் தமைப்போல் வாரும்

     அவைக்கண் நெடிது நாளாக வைகிய

     வழிமருத் துவரும் மந்திரி மாரும்

     முதலியோர் தமக்குக் கண்துயில் கோடலைக்

     கருதி உரைப்பது கண்படை நிலையே.’

                                  - தொ. வி. 283 உரை.

 

விளக்கு நிலை (வேறு)

 

136.  ‘வேலும்வேல் தலையும் விலங்காது ஓங்கிய

     ஆறுபோல் கோலொடு விளக்கும் ஒன்றுபட்டு

     ஓங்குமாறு ஓங்குவ தாக உரைப்பது

     விளக்கு நிலையென விளம்பப் படுமே.’

                                  - தொ. வி. 283 உரை.