புறநிலை
137. ‘நீவணங்கு ஒருவன் நினைப்பாது காப்ப
நின்னுடை வழிவழி நீளுவ தாக
எனஇயம் புவது புறநிலை என்ப.’
- தொ. வி. 283 உரை.
கடைநிலை
138. ‘பெரியோர் சேணிடை வருதலால் பிறந்த
வருத்தம் தீர வாயில்காக் கின்றோற்கு
என்வர வினைஇறைக்கு இயம்புதி நீஎனக்
கடைக்கண் நின்று உரைப்பது கடைநிலை ஆகும்.’
- தொ. வி. 283 உரை.
கையறுநிலை (வேறு)
139. ‘கணவனொடு மனைவி கழிந்துழி அவர்கண்
பட்ட அழிவுப் பாக்கியம் எல்லாம்
பிறருக்கு எடுத்தறி வுறுத்தித் தாமும்
இறந்துபடா தொழிந்த ஆயத் தாரும்
வேண்டு வனபெறும் விறலியர் குழாமும்
தனிப்படர் உழந்த செயலறு நிலையை
நிகழ்த்துவது கையறு நிலையா கும்மே.’
- தொ. வி. 283 உரை.
தசாங்கத்தயல்
141. ‘அரசன் தசாங்கம் ஆசிரிய விருத்தம்
ஐயிரண்டு அறைவது தசாங்கத் தயலே.’
- தொ. வி. 283 உரை.
அரசன் விருத்தம்
143. ‘கலித்துறை பத்தும் கலித்தா ழிசையும்
விருத்தம் முப்பதும் வெற்புநீர் நாடு
வருணனை யொடுநில வருணனை தாமும்
வாள்மங் கலமும் தோள்மங் கலமும்
அறைகுவது அரசன் விருத்தம் ஆகும்’
- தொ. வி. 283 உரை.
9 - 10
|