66
|
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
|
அளவியல் அளவழித் தாண்டகங்கள்
154. ‘இருபத்து ஏழு எழுத்து ஆதி ஆக
உயர்ந்த எழுத்தடி யினவாய் எழுத்தும்
குருவும் இலகுவும் ஒத்து வந்தன
அளவியல் தாண்டகம் எனவும் அக்கரம்
ஒவ்வாதும் எழுத்துஅலகு ஒவ்வாதும் வந்தன
அளவழித் தாண்டகம் எனவும் பெயர்பெறும்.’
- தொ. வி. 283 உரை.
செவியறிவுறூஉ
157. ‘பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண்
அவிதல்கடன் எனஅவை அடக்கியல் பொருளும்
மருட்பாவால் உரைப்பது செவியறி வுறூஉவே’
- தொ. வி. 283 உரை.
வாயுறை வாழ்த்து
158. ‘கடுவும் வேம்பும் கடுப்பன ஆகிய
வெஞ்சொல் தாங்க மேவாது ஆயினும்
பின்னர்ப் பெரிதும் பயன்தரும் என்ன
மெய்ப்பொருள் உறமருட் பாவால் விளம்புதல்
வாயுறை வாழ்த்துஎன வைக்கப் படுமே.’
புறநிலை வாழ்த்து
159. ‘வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்
பழிதீர் செல்வமோடு ஒரு காற்கு ஒரு கால்
சிறந்து பொலிவாய் எனமருட் பாவால்
பகர்வது புறநிலை வாழ்த்தெனப் படுமே.’
எழுகூற்றிருக்கை
162. ‘கோதில் ஏழுஅறை ஆக்கிக் குறுமக்கள்
முன்னின்றும் புக்கும் போந்தும் விளையாடும்
பெற்றி யால்வழு வாமை ஒன்று
முதலாய் ஏழ்ஈ றாய்முறை யானே
இயம்புவது எழுகூற்
றிருக்கை ஆகும்.’
|