பக்கம் எண் :

New Page 1

பாட்டியல் - முன்னுரை

67


 

முதுகாஞ்சி

 

166.  ‘இளமை கழிந்தறிவு மிக்கோர் இளமை

     கழியாத அறிவுஇல் மக்கள் தமக்கு

     மொழியப் படுவது முதுகாஞ்சி ஆகும்.’

                                  - தொ. வி. 283 உரை.

 

இயன்மொழி வாழ்த்து

 

167.  ‘இக்குடிப் பிறந்தோர்க்கு எல்லாம் இக்குணம்

     இயல்பென்றும் நீயும் அவற்றை உடையை

     என்றும்இன் னோர்போல் நீயும்இயல் பாக

     ஈஎன்றும் உயர்ந்தோர் எடுத்துமற்று அவனை

     வாழ்த்துவ தாக வழுத்துதல் இயன்மொழி

     வாழ்த்தாம் என்ன வழுத்தினர் புலவர்.’

                                  - தொ. வி. 283 உரை.