3. பால்
ஆணுக்குக் குற்றெழுத்தும், பெண்ணுக்கு நெட்டெழுத்தும், பேட்டினுக்கு
ஒற்றும் ஆய்தமும் பால் பொருத்தமான எழுத்துக்களாம்.
4. வருணம்
பன்னீருயிரும் க் ங் ச் ஞ் ட் ண் என்ற ஆறு ஒற்றும் அந்தணருக்கும்,
த் ந் ப் ம் ய் ர் என்ற ஆறுஒற்றும் அரசர்க்கும், ல் வ் ற் ன் என்ற
நான்கு ஒற்றும் வணிகருக்கும், ழ் ள் என்ற இரண்டும் வேளாளருக்கும்
உரிய வருணப் பொருத்தமான, எழுத்துக்களாம். இவற்றுள் பன்னிரண்டு
உயிர்களையும் பிரமனும் க் ங் என்பனவற்றை அறனும், ச் ஞ்
என்பனவற்றைத் திருமாலும், ட் ண் என்பனவற்றை முருகனும், த் ந்
என்பனவற்றை இந்திரனும், ப் ம் என்பனவற்றைச் சூரியனும், ய் ர்
என்பனவற்றைச் சந்திரனும், ல் வ் என்பனவற்றை இயமனும், ழ் ள்
என்பனவற்றை வருணனும், ற் ன் என்பனவற்றைக் குபேரனும் படைத்தனர்.
5. உண்டி
க் ச் த் ப் ந் ம் வ் என்ற ஏழ் மெய்களும் அ இ உ எ என்ற நான்கு
உயிர்களும் அமுத எழுத்துக்களாம். ய் ர் ல் ள் என்ற நான்கு மெய்களும்,
யா ரா லா ளா யோ ரோ லோ ளோ என்ற உயிர்மெய்களும்
நச்செழுத்துக்களாம்.
அமுத எழுத்தும் நச்செழுத்தும் முதல்மொழிக்கே அன்றித்
தசாங்கத்தயற்கும் கொள்க. மலை நதி நாடு ஊர் தார் குதிரை களிறு கொடி
முரசு ஆணை என்ற பத்தும் தசாங்கமாம்.
6. தானம்
அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ, ஒ ஓ என்பன தம்மில்
ஒத்தனவாகப் பாட்டுடைத் தலைவன் பெயரின் முதல் எழுத்தைத் தொடங்கி
இவ் வைவகை எழுத்துக்களையும் பால குமார ராச விருத்த மரணப்
பொருத்தங்களாக அமைத்து முதல் மூன்று
|