‘அகனும் புறனும்என்று ஆயிரு பாற்றாய்,
வகைபட வந்த அணிநலம் தழீஇச்,
செய்யுள் இடவயின் புல்லிய நெறித்தே’
என்று கூறிய செய்தியாகும். அகலக்கவி இலக்கணம் - சொல் - தொடர்நிலை பொருள்தொடர்நிலைச்
செய்யுள் இலக்கணம்.
‘எழுநிலத்து எழுந்த செய்யுள் தெரியின்
அடிவறை இல்லனஆறு எனமொழிப’ - தொல். பொ. 476
ஆதலின் பாவும் இனமும் அடிவரையறை உடையன என்பதும், உரை நூல் மந்திரம் பிசி முதுசொல்
குறிப்புரை என்ற ஆறும் அடிவரையறை இல்லன என்பதும் கொள்ளப்படும்.
இவ்வியல் பாட்டியல் என்ற பெயரை உடைத்தாய்ப் பாட்டு அல்லாத ஏனைய செய்திகளையும் உணர்த்துதல்
பொருந்துமோ எனின், வெண்குடைப் பெருவிறல் வழுதி என்புழி, வழுதிக்குச் செங்குடை முதலிய ஏனைய
குடைகளும் உளவேனும், ஏனையோரிடம் இல்லாத வெண்குடையைப் பெற்றிருக்கும் சிறப்புப்பற்றி அவன்
வெண்குடைப் பெருவிறல் வழுதி என்று அழைக்கப்பட்டாற்போல, இவ்வியலின்கண் ஏனைய இலக்கணங்களும்
கூறப்பெறினும் மற்ற இயல்களில் கூறப்பெறாத பாட்டிலக்கணத்தைத் தானே உணர்த்தி நிற்றலின் அத்தலைமை
பற்றிய சிறப்புப்பற்றிப் பாட்டியல் என்று பெயரிடப்பட்டது. பிறிதின் இயைபு நீக்கல், தன்னோடு
இயைபின்மை நீக்கல் என்ற அடைமொழி இலக்கணம் இரண்டனுள் இது தன்னோடு இயைபின்மை நீக்கல்
என்ற அடைமொழி இலக்கண வகையைச் சேர்ந்தது.
செய்யுளியலில் தனிப்பட்ட முறையில் செய்யுள் இயற்று மாற்றிற்கு இலக்கணம் கூறப்பட்டது.
இப்பாட்டியலில் சொல் தொடர்நிலை பொருள்தொடர்நிலைச் செய்யுட்களின் பொது அமைப்பும்
பொருள்அமைப்பும் கூறப்படுகின்றன. எனவே தனிநிலைச்செய்யுள் இலக்கணம் செய்யுளியலுள்ளும் தொடர்
-
|