பாட்டியல் - நூற்பா எண் 1
|
75
|
நிலைச் செய்யுள் இலக்கணம் பாட்டியலுள்ளும் கூறப்படும் எனலாம். செய்தல்
செய்யுள் என்பனவற்றில் தல், உள் என்பன தொழிற் பெயர் விகுதிகளாம்.
செய்யுளியலில் தனிப்பட்ட வகையில் பாவும் பாவினமும்
விளக்கப்பட்டுள்ளன. தொடர்நிலைச் செய்யுள்கள் அவற்றாலேயே
அமைக்கப்பட்டுள்ளன. நூற்பா ஆகிய சூத்திரம் பெரும்பாலும் ஆசிரிய
அடியாலேயே யாக்கப்படுகிறது. குறிப்பு என்பது இருந்ததனை இருந்தபடி
இருந்துகாட்டும் ஞானிகளது நிலை. அந்நிலையில் அவர் யாதும் உரையார்
ஆயினும் அவர் நிலையை உணர்த்துவதற்கும் பாட்டே கருவியாகப்
பயன்படுகிறது. இம்மூன்று காரணங்களானும் இந்நூற்பாவில் பாட்டு
முதலாவதாகக் கூறப்பட்டுள்ளது.
‘மாத்திரை முதலா யாத்து இனிது அமைத்த’ என்ற அடை பாட்டிற்கே
முற்றும் பொருந்துவது. மாத்திரை முதலாக வண்ணம் ஈறாகச்
சொல்லப்பட்ட இருபத்தாறு சிறப்பு உறுப்புக்களும், அம்மை முதல் இழைபு
ஈறாகச் சொல்லப்பட்ட எண்வகைப் பொது வனப்புக்களும், அடிவரையறை
உடையனவாகிய பாக்களின்கண்ணும் பாவினங்களின்கண்ணுமே காணப்படும்
என்பதும் ஏனைய நூல் முதலியவற்றில் அம்முப்பத்துநான்கும் குறைவறக்
காணப்பெறா என்பதும் கொள்க.
பாட்டு முதல் குறிப்புரை ஈறாகக் கிடந்தன இப்பொருளதி காரத்தின்
தொடர்பு உடையன. மரபு முதலிய இந்நூலின் மூன்று அதிகாரங்களுக்கும்
தொடர்பு உடையன.
‘மாத்திரை முதலா யாத்து இனிது அமைத்த பாட்டு’ என்பது
அநுவாதம் என்கின்றார். முன்பு கூறப்பட்டது ஒன்றனையே பின்னும்
இயைபுபற்றி மீண்டும் கூறுதல் அநுவாதம் என்பது பொதுவான கருத்து.
இலக்கணவிளக்கத்துள் பாட்டின் உறுப்புக்கள் எழுத்து அசை சீர் தளை
அடி தொடை என்ற ஆறாகவே குறிக்கப்பட்டுள்ளன. ஆனால்
தொல்காப்பியத்திலேயே, மாத்திரை எழுத்தியல் அசைவகை சீர் அடி யாப்பு
மரபு
|