76
|
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
தூக்கு தொடை நோக்கு பா
அளவியல் திணை கைகோள் கூற்று கேட்போர் களன்
காலம் பயன் மெய்ப்பாடு எச்சம் முன்னம்
பொருள் துறை மாட்டு வண்ணம் என்பனவும்
அம்மை அழகு தொன்மை தோல் விருந்து இயைபு புலன் இழைபு
என்ற எண்வகை
வனப்பும் ஆகிய முப்பத்துநான்கு உறுப்புக்களும் கூறப்பட்டுள்ளன. தொல்காப்பியம்
கூறிய செய்யுளுறுப்பைப் பாட்டியல் ஈண்டுக் குறிப்பிடுவது அநுவாதம் என்கின்றது.
முன்பு கூறப்படாத
பொருளையும் கூறப்பட்டது போல எடுத்துக் கூறுதலும்
அநுவாதத்தில்அடங்கும் என்பது,
‘அளபெடை மிகூஉம்
இகர இறுபெயர்
இயற்கைய ஆகும் செயற்கைய
என்ப’
- தொல். சொ. 125
என்ற சொற்படல நூற்பா
உரையுள் சேனாவரையர் இகரம் அளபெடுத்தலை அநுவாதம்
என்றார். அகர உகர எகர ஒகரங்களாகிய எழுத்துப்
பேறளபெடையை
எழுத்துப்படலத்தில் சொற்ற தொல்காப்பியனார், இகரமாகிய எழுத்துப் பேறளபெடையை
முன்னர்ச் சுட்டாமலேயே சொற்படலத்துள், ‘அளபெடை மிகூஉம் இகர இறுபெயர்’
என்று குறிப்பிட்டதைச்
சேனாவரையர் இகரம் மிகும் என அநுவதித்தார் என்ற
கருத்தைப் பின்பற்றியே மாத்திரை முதலாயாத்து
இனிது அமைத்த பாட்டு என்பது
அநுவாதம் என்று சுட்டப்பட்டது போலும். முதலாக என்பது முதலா என்று
தொகுக்கும்வழி
தொகுத்தது. ஒருசொல் எஞ்சி நிற்பதனைச் சொல்லெச்சம் என்று
கொள்வது இவ்வாசிரியர் கருத்தாம்.
நான்கு பாவிற்கும்
உரிய வருண உரிமை முதலியன பிற என்பதனால்
கொள்ளப்பட்டன.
‘வெண்பா முதல்வஞ்
சிப்பா இறுதி
நான்குபா வினுக்கும்
நாளும் கிரகமும்
நிலனும் குலனும் நிறமும்
இராசியும்,
ஆகிய இருமூன்று இலக்கணப்
பகுதி
குறித்தார் முற்றுணர்
குறவர் என்ப.’
- மு. வீ. யா. ஒ. 50
1
|