| 
  
    | 
78         | 
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |    
விளக்கம் 
   
         நிறுத்தமுறை - பாட்டியல் முதல் நூற்பாவில் நிறுத்தமுறை செய்யுள் என்ற பொதுத் தலைப்பில் 
பா முதலிய ஏழும் அடங்கும். பா என்ற தலைப்பில் ஐவகைப்பாக்களும் பதினான்கு வகைப் பாவினங்களும் 
அடங்கும். பாவும் பாவினமும் அடிவரையறை உடையன. நூல் உரை பிசி மந்திரம் முதுசொல் குறிப்புரை 
என்ற ஆறும் அடிவரையறை இல்லன; இவை ஏழும் பொதுவாகச் செய்யுள் என்றே வழங்கப்பெறும் என்பது 
உணரப்படும். 
   
         பா என்பதற்கு விளக்கம் பேராசிரியர் நச்சினார்க்கினியர் என்பாரைப் பின்பற்றியே 
கூறப்பட்டுள்ளது. (தொ. பொ. 313) பாடலில் உள்ள எழுத்துக்களும் சொற்களும் விளங்காது போயினும், 
அது இன்ன பா என்பதனை அதன் ஓசையைக் கொண்டே உணரலாம் என்றவாறு. ஓசையாவன - செப்பல், அகவல், 
துள்ளல், தூங்கல் என்பன. பாடல் ஆடல் - அல் தொழிற்பெயர் விகுதி. பாட்டு ஆட்டு - து 
தொழிற்பெயர் விகுதி அன்று. பாடு ஆடு என்ற பகுதி இரட்டித்துத் தொழிற்பெயர் ஆயின. அத்தொழிற்பெயர் 
ஆகுபெயரால் ஓசையைக் குறித்து நின்றது. இனி, து என்பது குறிப்பு வினைமுற்று விகுதியாகுங்கால் 
பாண் + து என்று பிரித்துக்காண்க.                       2 
   
பாட்டின் வகை 
   
763. ஆசு மதுரம் சித்திரம் அகலம்என்று 
       ஓசை எழும்பாட்டு ஒருநால் வகைத்தே. 
   
இஃது அப்பாட்டின் பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது. 
   
         இ-ள் : பாஉறுப்பு மேற்கொண்டு ஒலிக்கும் பாட்டு ஆசுகவி என்றும் மதுரகவி என்றும் சித்திரகவி 
என்றும் வித்தாரகவி என்றும் நான்குகூற்றினை உடைத்து என்றவாறு.
 
   3 |