8 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
பொருத்தங்களையும்
ஏற்று, ஏனை இரண்டையும் விடுத்து ஏற்ற
பொருத்தமுடைய எழுத்தை முதற்சீர் முதல் எழுத்தாகக் கோடலே தானப்
பொருத்தமாம்.
7. அக்கரம்
முதற்சீர் எழுத்துப் பொருத்தத்திற்கு மூன்று ஐந்து ஏழ் ஒன்பது என்ற
வியனிலை எழுத்துக்களே ஏற்றனவாம். சமனிலையாகிய நான்கு ஆறு எட்டு
என்பன பொருந்தா.
8. நாள்
இனி, நாட்கு உரிமை கூறும் வழி அ ஆ இ ஈ என்ற நான்கு உயிரின்
நாள் கார்த்திகை; உ ஊ எ ஏ ஐ என்பனவற்றின் நாள் பூராடம்; ஒ ஓ ஒள
என்பனவற்றின் நாள் உத்திராடம்; க கா கி கீ - திருவோணம்; கு கூ -
திருவாதிரை; கெ கே கை - புனர்பூசம்; கொ கோ கௌ - பூசம்; ச சா சி
சீ - ரேவதி; சு சூ செ சே சை - அசுவினி; சொ சோ சௌ - பரணி; ஞா
ஞெ ஞொ - அவிட்டம்; த தா - சோதி; தி தீ து தூ தெ தே தை -
விசாகம்; தொ தோ தௌ - சதயம்; ந நா நி நீ நு நூ - அநுடம்; தெ தே
தை - கேட்டை; தொ தோ தௌ - பூரட்டாதி ப பா பி பீ - உத்திரம்; பு
பூ - அத்தம்; பெ பே பை பொ போ பௌ - சித்திரை; ம மா மி மீ மு
மூ - மகம்; மெ மே மை - ஆயில்யம்; மொ மோ மௌ - பூரம்; யா -
உத்திரட்டாதி; யூ யோ - மூலம்; வ வா வி வீ - ரோகிணி; வெ வே வை
வௌ - மிருகசீரிடம் என முறையே எழுத்துக்களுக்கு உரிய நாள்கள்
வரையறுக்கப்பட்டுள்ளன.
தலைவனுடைய பெயரின் முதலெழுத்திற்குரிய நாளைக்
குறித்துக்கொண்டு அதுமுதல் 27 நாட்களையும் ஒன்பது ஒன்பதாகப்
பிரித்துச் சன்மம் அநுசன்மம் உபசன்மம் என்று பெயரிட்டு அவற்றில்
வரும் இரண்டு நான்கு ஆறு எட்டாம் நாள்களுக்கு உரிய எழுத்துக்களே
நாட்பொருத்தம் உடைய எழுத்துக்கள் என்று கொள்ளுதல் வேண்டும்.
|