| 
 பாட்டியல் - நூற்பா எண் 6 
     | 
    
     
    83  | 
   
 
  
சித்திரகவி 
  
766. சித்திர கவிமேற் செப்பியது ஆகும். 
  
இது நிறுத்த முறையானே சித்திரகவி இலக்கணம் மாட்டேற்றான் 
எய்துவிக்கின்றது. 
  
     இ - ள் : சித்திரகவியாவது மேல் சொல்லணியில் கூறிய சித்திரகவியே 
ஈண்டுக்கூறும் சித்திரகவியாம். என்றவாறு. அது மடக்கும் அதன் 
வழிப்படூஉம் சித்திரமும் ஆம் என்றவாறு.           
6 
  
விளக்கம் 
  
     பொருட் சிறப்பையே பெரிதும் கருதாது, சொல்லடுக்கையே 
குறிக்கோளாகக் கொண்டு சொல்லழகு காணும் விருப்பம் உடையார் உள்ளம் 
உவகை உறும் வகையில் பாடப்படும் நூற்றைந்து வகை மடக்கும், 
கோமூத்திரி முதலாக இருபது திறத்தனவாகக் கூறப்பட்ட மிறைக்கவிகளும் 
சித்திரகவிகளாம். ‘இனி, நிறைமொழி மாந்தர் மறைமொழி போல்வன சில 
மிறைக் கவி பாடினார் உளர் என்பதே பற்றி அல்லாதாரும் அவ்வாறு 
செய்யுள் செய்தல் மரபு அன்று; அவை சக்கரம், சுழிகுளம் கோமூத்திரிகை, 
ஏகபாதம், எழுகூற்றிருக்கை, மாலைமாற்று என்றாற்போல்வன. இவை 
மந்திரவகையான் அன்றி வாளாது மக்களைச் செய்யுள் செய்வார்க்கு அகன் 
ஐந்திணைக்கும் மரபு அன்று என்பது கருத்து ... ... ... அவற்றிற்கு வரையறை 
வகையான் இலக்கணம் கூறலாகாது என்பது.’ 
                                  - தொ. பொ. 645. பே. 
  
ஒத்த நூற்பாக்கள் 
  
     ‘மாலை மாற்றே சக்கரம் சுழிகுளம் 
     ஏக பாதம் எழுகூற் றிருக்கை 
     காதை கரப்பே கரந்துறை பாட்டே 
  
						
					 |