பாட்டியல் - நூற்பா எண் 8
|
89
|
இ - ள் : தொடர்நிலை தனிநிலை என்னும் இரண்டனுள் தொடர்நிலைச்
செய்யுட்களின் வேறுபாடுகளைக் கூறும் இடத்து முடிவுடைய அல்ல என்று
கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
8
விளக்கம்
முதற்கண் நிற்றல் - சென்ற நூற்பாவில் முதல்வகையாகக் கூறப்படல்.
தொடர்நிலைச் செய்யுள் வேறுபாடுகளைப் பாட்டியல் வரைந்த
ஆசிரியர் பலரும் தத்தம் கருத்திற்கு ஏற்பப் பலவகைகளாகப் பிரித்து
எண்ணியுள்ளனர். தொடர்நிலைச் செய்யுட்கள் இவ்வளவே வரையறை
உடையன என்ற யாப்புறவு இல்லை. ஆசிரியர்களிடையே வரையறையில்
வேறுபாடு உள்ள செய்தி இவ்வியல் முகவுரையில் விளக்கமாகக்
கூறப்பட்டுள்ளது.
வீரமாமுனிவர் சதுரகராதியில் 96 என்ற வரையறையை
வற்புறுத்தியுள்ளார். பிரபந்தமரபியலும் 96 என்ற வரையறையைக்
கூறியுள்ளது. சதுரகராதி கூறுவனவற்றைப் பிற்சேர்க்கையில் காண்க.
‘வானவர் ஏத்தும் மறையோர் முதலிய
மக்களின் னோர்க்குத் தக்க தன்மையின்
பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாத்
தொண்ணூற் றாறுஎனும் தொகை யதாம்முற்
பகர்இயல் முன்னுறப் பாடும் பிரபந்த
மரபிய லதுபிர பந்தமர பியலே.’
- பி. ம. 1.
‘தொடர்நிலை பொருளினும் சொல்லினும் ஆகும்;
பொருட்டொடர் நிலைதற் பொருள்தரத் தானே
பற்பல பாட்டாய்ப் பயனில் தொடரும்;
சொற்றொடர் நிலையெனின் தூக்கந் தாதியே.’
- தொ. வி. 254.
|