தலைவன்
பெயருக்கு உரிய நட்சத்திரம் தொடங்கி அது தொடங்கிவரும்
எட்டாம் இராசிக்குரிய இரண்டேகால் நட்சத்திரமும், எண்பத்தெட்டாம்கால்
பொருந்திய அழிவுதரும் நாளும் நீக்கி ஏனை நாள்களுக்குரிய
எழுத்துக்களை முதற்சீர்க்குக் கொள்க.
9. கதி
க ச ட த ப ற என்ற வல்லொற்றுக்களும் அ இ உ எ என்ற நான்கு
குறில்களும் தேவர்கதிக்கும், ஆ ஈ ஊ ஏ என்ற நெடில்களும் ங ஞ ண ந
ம என்ற மெல்லின மெய்களும் மக்கள் கதிக்கும், ஒ ஓ ய ர ல வ ழ ற
என்பன விலங்கின் கதிக்கும் ஏனைய நரகர்கதிக்கும் உரிய எழுத்துக்களாம்.
10. கணம்
மூவசைச்சீர்களுள் ஆதிநேர் நீர்க்கணம், இடைநேர் தீக்கணம்,
இறுதிநேர் ஆகாயகணம், முற்றும் நேர் சுவர்க்க கணம், ஆதிநிரை
சந்திரகணம், இடைநிரை சூரியகணம், இறுதிநிரை வாயுகணம், முற்றும்நிரை
பூ கணம் எனப்படும். இவற்றுள் ஆதி நேரும் முற்றும் நேரும் ஆதி
நிரையும் முற்றும் நிரையும் முதற் சீர்க்குப் பொருத்தமுடைய கணங்களாம்.
தேமா புளிமா என்ற ஈரசைச் சீர்களைத் தேமாங்காய் புளிமாங்காய்
போலவும், கருவிளம் கூவிளம் என்ற ஈரசைச்சீர்களைக் கருவிளங்கனி
கூவிளங்கனிபோலவும் கொள்க. தேமா பிரமகணம், புளிமா இலக்குமிகணம்,
கருவிளம் சுரபிகணம் கூவிளம் கருடகணம் எனவும் பெயரிடப்படும்.
தானப்பொருத்தம், நாட்பொருத்தம், கணப்பொருத்தம் ஆகியவை
தவறுதல் கூடா. மங்கலப் பொருத்தம் பிறழ்வதாயின் மங்கலச்சொற்கு
அடைகொடுத்தும் பரியாயச் சொல் அமைத்தும் பாடலாம். அம்மங்கலச்
சொல் முதற்சீரின் முதலில் அன்றி நடுவிலும் இறுதியிலும் கூட வரலாம்.
பாட்டுடைத் தலைவனுடைய தசாங்கங்களை ஒரு சீராலே பாடுதல்
வேண்டும். பிரித்துப் பாடுவது குற்றமாம். பிரித்துக்கூறும் நிலை ஏற்பட்டால்
தொகை கொடுத்து நச்செழுத்து அகற்றிக் கூறல் வேண்டும்.
|