பக்கம் எண் :

பாட்டியல் - நூற்பா எண் 11

93


 

பிற என்றதனால் வாழி மாலை சங்கு தார் விசும்பு கவி கயல் சுடர் முரசு
கவரி தோகை நன்று தாமரை விளக்கு மலர் பழனம் இடபம் என்பனவும்
செல்வம் சீர்த்தி கீர்த்தி ஞாயிறு புயல் புனம் வேழம் களிறு பரி மதியம்
தீபம் முதலிய பரியாயச் சொற்களும் கொள்க.

 

விளக்கம்

 

     நிறுத்தமுறை - சென்ற நூற்பாவில் நிறுத்திய முறை. பிற என்பதனால்
ஏனைய மங்கலச் சொற்களும், சொல்லப்பட்ட மங்கலச் சொற்களின்
பொருள்தரும் ஏனைய சொற்களும் கொள்ளப்பட்டன

 

     செல்வம், சீர்த்தி கீர்த்தி, ஞாயிறு, புயல், புனல், வேழம் களிறு, பரி
 மதியம் தீபம் என்பன முறையே திரு, புகழ், பரிதி, கார், நீர், யானை, மா,
 திங்கள், மணி என்பனவற்றின் பொருளவாதல் உணரப்படும்.

 

ஒத்த நூற்பாக்கள்

 

மங்கலச்சொல்

 

     ‘பொன்பூத் திருமணி புனல்ஆ ரணம்கடல்

     செங்கதிர் திகிரி தேர்பரி எழுத்தே

     மாநிலம் கங்கை மலைபுகழ் அமுதம்

     கார்புயல் உலகம் களிறே அருந்ததி

     பார்மதி நாள்சீர் ஞெண்டுடன் என்ன

     எண்ணிய சொல்லே அவையல பிறவும்

     கண்ணிய மங்கலச் சொல்லெனக் காட்டினர்.’

                             - பொய்கையார். பன். பாட். 133.

 

     ‘சொல்லெனப் படுமவை சொல்லுங் காலைத்

     திரு பொன் பூமி புனல் மணி கடல் யாறு

     எழுத்து அமுது எழில் மழை பசுங்கதிர் செஞ்சுடர்