பக்கம் எண் :

288                      இலக
288

 இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


                   

     இத்துணையும் அளவியற்படச் செய்யுளியலுள் கூறிப் போந்த
செய்யுளின்கண் கிடக்கும் இலக்கணங்களைத் தொகுத்தும் வகுத்தும்
விரித்தும்கூறி, அளவியற்படாச் செய்யுள் இலக்கணம் கூறுகின்றார்.

என்னை?
 

  ‘எழுநிலத்து எழுந்த செய்யுள் தெரியின்

  அடிவரை இல்லன ஆறுஎன மொழிப.                    

      -தொல். பொ. 476

                                                       

    அவைதாம்,

  நூலி னான உரையி னான

  நொடியொடு புணர்ந்த பிசியி னான

  ஏது நுதலிய முதுமொழி யான

  மறைமொழி கிளந்த மந்திரத் தான

  கூற்றிடை வைத்த குறிப்பி னான.’                           

   -தொல். பொ. 477

 

என ஆசிரியர் தொல்காப்பியனார் எடுத்தோதலான் என்று
உணர்க.              

  (128)

                                     

விளக்கம்

 

     சீயநோக்கு என்றது பொருளதிகாரத்துக் கூறிய இதனை முன்னருள்ள
எழுத்து, சொல் அதிகாரங்கட்கும், பின்னர்க் கூறப்படும் அளவியற்படாத
செய்யுட்களுக்கும் கொள்வது.

 

ஒத்த நூற்பாக்கள்

 

     முழுதும் - தொல். பா. 425  

                  128

                         

பாயிரவகை

 

889.  பாயிரம் பொதுச்சிறப் பெனஇரு பாற்றே.

 

இது நூன்முகம் என்று சொல்லப்பட்ட பாயிரம் இத்துணைத்து என்கின்றது.