பக்கம் எண் :

New Page 1

தொல்காப்பிய நூற்பாக்கள்

 

    பாட்டியலில் எடுத்தாளப்பட்டுள்ள தொல்காப்பிய நூற்பாக்கள் 37 ஆகும்:
 அவை வருமாறு:

 

128.  ‘அவையடக் கியலே அரில்தபத் தெரியின்

     வல்லோன் கூறினும் வகுத்தனர் கொண்மின்என்று

     எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே.’

                                        - தொல். பொ. 425

 

129.  ‘நூலெனப் படுவது நுவலுங் காலை

     முதலும் முடிவும் மாறுகோள் இன்றித்

     தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி

     உள்நின்று அகன்ற உரையொடு பொருந்தி

     நுண்ணிதின் விளக்கல் அதுஅதன் பண்பே.’

                                             - தொல். பொ. 478

 

     ‘ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும்

     இனமொழி கிளந்த ஓத்தி னானும்

     பொதுமொழி கிளந்த படலத் தானும்

     மூன்றுறுப்பு அடக்கிய பிண்டத் தானும்என்று

     ஆங்குஅனை மரபின் இயலும் என்ப.’

 - தொல். பொ. 480

 

     ‘ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை

     மெய்ப்படக் கிளந்த வகைய தாகி

     ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின்

     முப்பத் திருவகை உத்தியொடு பொருந்தின்

     நூல்என மொழிப நுணங்கு மொழிப்புலவர்.’

                                                                                                                                                    - தொல். பொ. 653