பக்கம் எண் :

372                      இலக
372

 இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

நல்லவை :

   

    ‘அறம் திறம்பாமல் அறிவோர் அறுபத்து நான்கு கலையும்

     திறம் திரிந்தோர் சினம் செற்றம்பொய்காமம் சிதைந்துசித்தம்

     மறந்து ஒருகாலும் ஒருபால் படாதவர் மற்றும் குற்றம்

     துறந்து நின்றோர் குழு நல்லவையாம் என்று சொல்லுவரே.’

                                                  - நவ. 86

நிறையவை :

  

     ‘பாங்காய் ஒருதிறம் பற்றாதவர் பல கலைப்பொருளும்

     ஆங்கே உணர்ந்தோர் அடக்கம் உடையார் அவரவர்கள்

     தாம் காதலித்து மொழிவன கேட்போர் தருமநெறி

     நீங்கா நாவர் உறைந்த அக்கூட்டம் நிறையவையே.’

                                             - நவ. 87

தீயஅவை :

 

   ‘சொற்ற அடிசொல்தாம் பொய்ப்பவர் சொல்லும் நற்சொல்லினையும்

    குற்றம் இது என்று குலாவி உரைப்பவர் கூறும் பரிசு

    உற்றது உணர்ந்தோர் ஒருபாற் படுபவர் பொய்யுரையோர்

    செற்றம் சினத்தொடு சேர்ந்தார் இருப்பது தீயவையே.’

                                             - நவ. 88

குறையவை :

  

     ‘பாடவம் பேசிப் பலகால் நகைசெய்து பாங்குரைத்து

     நாடகம் காட்டி ஓர்நாயகம் இன்றி நவிலுநன்னூல்

     ஏடகம் நோக்காது இகலே பெருக்கி அறத்தை விட்டுக்

     கூடகம் செய்து பொய்கூறா விருக்கும் குறையவையே.’

                                             - நவ. 89

                                                  176

 

ஓரைப் பொருத்தம்

 

937. அகரமும் இகரமும் உகரமும் எகரமும்

    ஒகரமும் இனத்தோடு உதிக்கும் ஐ ஒளவும்

    உதயம் தொடங்கி ஓர் ஆறுஆ றாக

    விதமுறும் கடிகை எண்ணுநன் பகலின்