பக்கம் எண் :

239

அகர இகரம் எகரமாகும், அகர உகரம் ஒகரமாகும் என்பது வடநூலார் கருத்து ஆதல் பிரயோக விவேகம் 5ஆம் நூற்பா உரையான் அறிக.

சந்தி அக்கரம் பற்றிப் பிரயோக விவேகநூலார் கூறுவது ;

‘அகர இகரம் ஏகாரமாகும்’, ‘அகர உகரம் ஒகாரமாகும்’, ‘இகார வுகாரம் என்னும் இவற்றோடு, அகாரம் ஐஒள ஆகலும் உரித்தே’ இவ்வுரைச் சூத்திரங்களால் ஈரெழுத்தாகிய சந்தியக்கரம் என்றும் ஓரெழுத்தாகிய ஏகாக்கரம் என்றும் அறிக. தொல்காப்பியரும், ‘அகர இகரம் ஐகாரம் ஆகும்’ தொல்.54 ‘அகர உகரம் ஒளகாரம் ஆகும்’ தொல்.55. ‘அகரத் திம்பர் யகரப் புள்ளியும்-ஐஎன் நெடிஞ்சினை மெய்பெறத் தோன்றும்’ தொல். 56 எனச் சந்தி அக்கரமாக நேரே கூறினார். அவ்வாறு கொள்ளாது உரைகாரர் ‘ஐ ஒத்து இசைக்கும்’ நன் 125 ‘ஒள ஓரன்ன நன்125 என நன்னூலார் மதம் பற்றி ஐகாரம் போல ஆகும், ஒளகாரம் போல ஆகும். ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் என விரித்து விகாரமாக்கி நலிந்து பொருள்கொண்டு போலி எழுத்து என்று இடர்ப்படுவர், அவர் போலி எழுத்து என்றால்.

‘வைகிற்று எம்மனை வாழிய போழ்தெனக்
கையி னால்அடி தைவரக் கண்மலர்ந்து’           சிந்.345

எனவும்,

‘மெய்யணி பசும்பொற் சுண்ணம் மேதகு நான நீரின்
ஐதுபட் டொழுகி யானை அழிமதம் கலந்து சேறாய்’           சிந். 117

எனவும்.

‘ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’           தொல்.56

எனவும்.