307 என்னும் விகுதியை நிறுவி. ‘கடதற ஒற்றின்’ 47 என்பதனான் பகுதி விகுதிக்கு இடையே இறந்தகாலம் காட்டும் தகர இடைநிலையை வருவித்து, ‘இயல்பினும் விதியினும்’ 82 என்பதனான் மிகுத்து, ‘வலித்தல் மெலித்தல்’ 57 என்பதனான் அதனை மெலித்து, ‘புள்ளியீற்றின்முன் உயிர்தனித்து இயலாது’64 என்பதனான் இடைநிலைத் தகர ஒன்றின்மீதே விகுதி ஆகாரத்தை ஏற்றி ஒருமொழி ஆக்கி நடந்தான் என முடிக்க. நடந்தது என்னும் அஃறிணை ஒருமைப் படர்க்கை இறந்தகால இயற்றும் வினைமுதல் முனைமுற்றுப் பகுபதம் முடிப்புழித் துவ்விகுதியும் அகரச்சாரியையும், நடந்தேன் என்னும் விரவுத்திணைத் தன்மை ஒருமை இறந்தகால இயற்றும் வினைமுதல் வினைமுற்றுப் பகுபதம் முடிப்புழி ஏன் என்னும் விகுதியும், நடந்தாய் என்னும் விரவுத்திணை முன்னிலை ஒருமை இறந்தகால இயற்றும் வினைமுதல் வினைமுற்றுப் பகுபதம் முடிப்புழி ஆய் என்னும் விகுதியும் கொடுத்து முன் முடித்தாங்கு முடிக்க. இவ்வாறே இயற்றும் முனைமுதல் தெரிநிலை முனைமுற்றுப் பகுபதங்கள் எல்லாம் ஏற்ற பெற்றி அறிந்து முடித்துக் கொள்க. நடப்பித்தான் என்னும் உயர்திணை ஆண்பால் ஒருமைப் படர்க்கை இறந்தகால ஏவல் முனைமுதல் முனைமுற்றப் பகுபதம் முடிப்புழி, நடப்பித்தலைச் செய்தான் என்னும் தொழில் தோன்ற ‘முன்னர் ஓதிய முதல்நிலை இறுதியின்’ 44 என்பதனானே, நடப்பி என்னும் பகுதியை முதல்வைத்து முன் முடித்தாங்கு முடிக்க. பிறவும் அன்ன. கச்சினன் என்னும் உயர்திணை ஆண்பால் ஒருமைப் படர்க்கைக் குறிப்பான் முக்காலமும் கோடற்கு உரிய முனைக்குறிப்புமுற்றுப் பகுபதம் முடிப்புழி, பண்டு |