525 ஒருபது முதலியவற்றின் புணர்ச்சி 114. ஒருபது ஒருபஃது ஆதிஎன்று ஆதி ஒன்பதும் அவைஊர் பிறவும் எய்தின் கெடுதலும் திரிதலும் இல்என மொழிப. இது மேலனவற்றிற்கு எய்தியது ஒரு மருங்கு மறுக்கின்றது. இ-ள்: மேற்கூறியவாற்றான் முடிந்து நின்ற ஒருபது ஒருபஃது முதலிய இரு கூற்று எழுதிறத்து எண்ணுப்பெயர்கள். ஒன்று முதல் ஒன்பது எண்ணும் அவை ஊர்ந்த பிறவும் வந்து புணரின், இடைநின்ற தகரஒற்று முன்னர்க் கூறியவாற்றால் கெடுதலும் ஆய்தமாகத் திரிதலும் இன்றி இயல்பாக முடியும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. வரலாறு: ஒருபத்தொன்று, இருபத்தொன்று, ஒருபத்தொருகோடி-கழஞ்சு-தலம்-காதம்-என ஒன்பதின் காறும் ஒட்டுக. பிறவும் அன்ன. இவை நூற்றொருபத் தொன்று, நூறாயிரத்தொருபத்தொன்று என வருமாறும் உணர்க.62 விளக்கம் எய்திவது - பத்து என்பதன் இடைஒற்றுக் கெட்டும் ஆய்தமாகத் திரிந்தும் நிலைமொழி புணர்தற்கு அமையும் என்பது. ஒருமருங்கு மறுத்தல் பத்து என்பதன் இடையொற்றுத் திரிதலும் கெடுதலும் இல்லை என்பது. எனவே, சென்ற நூற்பாக் கருத்தான் கெடாது நின்ற பஃது என்பதன் ஆய்தம் இந்நூற்பாக் கருத்தான் கெட்டே முடியும் என்பது. |