பக்கம் எண் :

65

அமைதி

முன்னர்ப் பாயிரம் வைத்து இது பாயிரம் என்று உரைத்துப் பின் அது கேட்ட மாணாக்கர்க்கு நூல் உரைப்பான் தொடங்கியது வழு என்றார் முனிவர்.

ஒரு புடையானும் அறியாத மாணாக்கனுக்கு ஆசிரியன் தானே எடுத்து விளக்கம் தருதல் மரபு என்பது, முற்பட்ட இறையனார் களவியல் உரை முதலிய வற்றால் பெறப்படுதலின், முனிவர் கூறிய குறை புரை படுமாறு அறிக.

நூலின் இயல்பு பாயிரத்துள் அடங்காது என்ற இலக்கண விளக்க நூலார் கொள்கையை அடுத்தபடியாக மறுத்துள்ளார்.

‘நூலே நூவல்வோன் நுவலுந் திறனே
கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும்
எல்லா நூற்கும் இவைபொதுப் பாயிரம்’.           நன்-3

என்ற நூற்பாவினை உட்கொண்டு முனிவர் குறிப்பிட்டுள்ள செய்தி பொருந்துவதன்று என்று சண்முகனார் முனிவர் கருத்தை மறுக்கும் வாயிலாக, இலக்கண விளக்கச் செய்தியே சான்றோர் கருத்தாகும் என்பதை விளக்கியுள்ளார். அதன் சுருக்கம் பின்வருமாறு:

‘நூல்நுதல் பொருளைத் தன் அகத்து அடக்கி, என்பது நூல் இன்ன இலக்கணத்தது என்பதை விளக்குவது அன்று, இந்நூல் தமிழை நுதலிற்று, அறத்தை நுதலிற்று, பொருளை நுதலிற்று, இன்பத்தை நுதலிற்று எனக் கூறி, ஆக்கியோனால் நூலுள் கூறப்படாத செய்தியைச் சொல்லுவதேயாம். அவர் கூறியவாறு நூல் அவயவியும் நூல் இயல்பு அவயவமும் ஆயினும், அவயவி ஆகிய உடம்பில் கண் காது முதலிய அக உறுப்பும், மூக்குக்கண்ணாடி முதலிய புறஉறுப்பும்