சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-33117

 

‘தன்மை சுட்டின் பன்மைக்கு ஏற்கும்’
 
192
    என்ற இரு நூற்பாவால் விளக்கிக் கூறினார்.

ஒருமைச்சொல் பன்மை கொண்டு முடிதலின் வழு ஆயினும், ஆண் ஈற்றானும்
பெண் ஈற்றானும் வாராமையின் ஆண்பால்முடிபு பெண்பால்முடிபு கோடல் நிரம்பாது
எனப் பலர்பால் முடிபுகோடல் அமைதியாதல் தொன்று தொட்டு வந்த மரபானே
கொள்ளப்படும் என்பது.

ஆர் ஈற்று விரவுப்பெயரும் அஃறிணைப் பெயரும் உயர்திணைப் பெயரும்
பலர்பால் வினைகொண்டு முடிதலை ஆசிரியர் தொல்காப்பியனாரும்,
                    

 

‘இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி
பலர்க்குரி எழுத்தின் வினையொடு முடிமே’
 

தொல்.சொல்.270
என்ற நூற்பாவானும், அதன்கண் ஒன்றென முடித்தல் என்பதனானும் கொள்ளவைத்தார்.
ஆர் ஈறு உயர்த்தற் பொருட்டாய் வருதலும், திணை பால் வழுவமைதியும் அவருக்கும்
உடன்பாடாதல் அறிக.

கடுவன், மூலன், குமரி என்பன பால்காட்டும் ஈற்றான் வந்தனவேனும், நிலத்துக்
கருப்பொருள்களாகிய அஃறிணைப் பொருள்களையே உணர்த்தி நிற்றலின் அவை
ஈறுபற்றி விரவுத்திணை ஆகாது, பொருள்பற்றி அஃறிணையேயாம் என்பதனைத்
தொல்காப்பியனார்,
 

 

‘இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும்
இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா
நிலத்துவழி மருங்கின் தோன்ற லான.’
 

தொல்.சொல்.196
என்பதனால் விளக்கினார்.